லண்டனில் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

லண்டனில் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இணையதள வணிகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டனில் 7,000 நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படும்: அமேசான்
லண்டனில் 7,000 நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படும்: அமேசான்

லண்டனில் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இணையதள வணிகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதள வணிகத்தில் அனைத்து விதமான பொருட்களையும் வீடு தேடி விநியோகம் செய்யும் அமேசான் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தமது கிளையை நிறுவியுள்ளது. 

அந்தவகையில் தற்போது இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 7,000 நிரந்தரப் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

கிடங்குகள், பொருட்கள் பிரித்துவைக்கும் மையங்கள், விநியோகம் செய்யும் நிலையங்கள், அலுவலகப் பணி போன்றவற்றிற்காக  3,000 புதிய பணியாளர்கள் ஏற்னகவே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மேலும் அரசாங்க ஊதியக் குறைப்பு மேலும் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கரோனா பரவலால் பல்வேறு தரப்பட்ட மக்கள் இணையதளம் மூலம் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டிவருவதால், இந்தத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com