"தி ராக்" மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு

தி ராக் என அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவெயின் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவெயின் ஜான்சன்
மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவெயின் ஜான்சன்

தி ராக் என அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவெயின் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

'தி ராக்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பிரபல மல்யுத்த வீரர் டுவெயின் ஜான்சன். இவர் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதன்கிழமை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். டுவெயின் ஜான்சன், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது..

தனது பதிவில் அவர் நெருங்கிய குடும்ப நண்பர்களிடமிருந்து கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார். “நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ள டுவெயின் ஜான்சன் தனது ரசிகர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com