துபையில் ‘ஓய்வு விசா’ அறிமுகம்

துபையில் முதல்முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவுத் திட்டத்தை புதன்கிழமை பிரதமர் ஷேக் முகமது அறிவித்தார்.
துபையில் ‘ஓய்வு விசா’ அறிமுகம்
துபையில் ‘ஓய்வு விசா’ அறிமுகம்

துபையில் முதல்முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவுத் திட்டத்தை புதன்கிழமை பிரதமர் ஷேக் முகமது அறிவித்தார்.

‘துபையில் ஓய்வு பெறுதல்’ என்ற திட்டத்தின் கீழ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் துபையில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்த நுழைவு இசைவிற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் வலைத்தளம் (retireindubai.com) மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த நுழைவு இசைவைப் பெறுவதற்கு நிபந்தனைகளாக, ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ரூ.4 லட்சம் முதலீடுகள் அல்லது ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறவேண்டும் அல்லது வங்கிகளில் ரூ.2 கோடி சேமிப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் அல்லது துபையில் ரூ.4 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபையில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ரனேஷ் பாகி (வயது 65). இவர் துபையில் உள்ள தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக உள்ளார். இவர் இத்திட்டம் குறித்து கூறுகையில், இந்த திட்டம் அரசு திசையில் செல்வதற்கான அடுத்த படிக்கட்டாகும். 

துபையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த எங்களைப் போன்ற வயதான தம்பதியினர்கள் உள்ளனர். என் தனிப்பட்ட கருத்தில், துபை தான் தற்போது எனக்கு முதல் வீடு. இந்த விசா அறிமுகப்படுத்தியதன் மூலம் துபை அரசு எங்களை எவ்வளவு நேசிக்கிறது என்பது தெரிகிறது. ஒரு தொழிலாள வர்க்கத்தினருக்கு இந்தத் திட்டம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது என கூறினார்.

பல்வேறு நாடுகளில் இருந்து துபைக்கு சென்று பல ஆண்டுகள் வேலை செய்து சேமிக்கும் பணத்தை தன் நாட்டிற்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், துபை அரசின் இந்த புதிய திட்டத்தால் அந்த எண்ணம் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com