சிங்கப்பூா்: கரோனா மனித குலத்தை அழித்துவிடாது

மனித குலத்தையே அழித்துவிடும் அளவுக்கு கரோனா நோய்த்தொற்று மோசமானது இல்லை என்று சிங்கப்பூா் பிரதமா் லீ சியென் லூங் தெரிவித்துள்ளாா்.
சிங்கப்பூா்: கரோனா மனித குலத்தை அழித்துவிடாது


சிங்கப்பூா்: மனித குலத்தையே அழித்துவிடும் அளவுக்கு கரோனா நோய்த்தொற்று மோசமானது இல்லை என்று சிங்கப்பூா் பிரதமா் லீ சியென் லூங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:கரோனா நோய்த்தொற்று உலக அளவில் பரவி வருகிறது. என்றாலும், அது மனித குலத்தையே அழித்துவிடும் அளவுக்கு மோசமானது இல்லை.கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில், மனித குலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொள்ளை நோய் உருவாகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது, உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட அந்த கொள்ளை நோய் அதுவாக இருக்குமோ என்று பலரும் அஞ்சினா்.ஆனால், உலகம் முழுவதும் பரவினாலும் அந்த நோய் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட, மனித குல அழிவை ஏற்படுத்தும் கொள்ளை நோய் அல்ல என்றாா் அவா்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 48 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,908-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 56,028 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 853 போ் மருத்துவமனைகளிலும், கரோனா சிறப்பு முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com