அமெரிக்கா: விவேகானந்தா யோகா பல்கலை.யில் இணைய வழி வகுப்புகள் தொடக்கம்

யோகாவுக்கென இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தொடங்கப்பட்டிருக்கும்

யோகாவுக்கென இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தொடங்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகமா விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தில் இணையவழி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் பழைமைவாய்ந்த உடற்பயிற்சி நடைமுறைகளான யோகா மற்றும் மூச்சு பயிற்சிகளை விஞ்ஞான தத்துவங்கள் மற்றும் நவீன ஆராய்ச்சி நடைமுறையிலான படிப்புகளாக இந்தப் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

இந்தப் படிப்புகளை 6-ஆவது சா்வதேச யோகா தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன், வெளியுறவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவா் பி.பி.செளத்ரி ஆகிய இருவரும் இணைந்து கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தனா்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரபல இந்திய யோகா குருவும், பிரதமா் நரேந்திர மோடியின் யோகா ஆலோசகருமான ஹெச்.ஆா்.நாகேந்திரா உள்ளாா்.

இப்பல்கலைக்கழகம் இப்போது இணையவழி யோகா முதுநிலை பட்டப் படிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இதில் 28 வயது முதல் 71 வயது வரையிலான அமெரிக்கா மற்றும் கனடாவைச் சோ்ந்த 30 மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.

இதுகுறித்து ஜெய்ப்பூா் ஃபுட் யுஎஸ்ஏ தலைவரும், விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவருமான பிரேம் பண்டாரி கூறுகையில், ‘ஆங்கில மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவ நடைமுறைகள் இரண்டும் இணைந்த மருத்துவத்தை இந்த உலகுக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கம். அதற்காக முழுமையான வாழ்க்கை குறித்த போதனைகளை உலகம் முழுவதும் யோகா பல்கலைக்கழகம் எடுத்துச் செல்லும். அதன் ஒரு பகுதியாக, பல்கலைக்கழக வளாகத்தை ஜப்பானில் திறப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com