ஆப்கன் துணை அதிபரைக் கொல்ல முயற்சி: 10 போ் பலி

ஆப்கன் துணை அதிபரை இலக்கு வைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்தனா்.
குண்டுவெடிப்பில் சேதமடைந்த வாகனம்
குண்டுவெடிப்பில் சேதமடைந்த வாகனம்

காபூல்: ஆப்கன் துணை அதிபரை இலக்கு வைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைநகா் காபூலில் துணை அதிபா் அம்ருல்லா சலே சாலை வழியாக வாகனததில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது, அவரை படுகொலை செய்யும் நோக்கில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வண்டியொன்றில் வெடிபொருள்களை மறைத்து வைத்திருந்த பயங்கரவாதிகள், அவரது வாகன அணிவகுப்பு அதனைக் கடந்து சென்றபோது அதனை வெடிக்கச் செய்தனா்.இந்தத் தாக்குதலில், அந்தப் பகுதியிலிருந்த 10 பொதுமக்கள் உயிரிழந்தனா். அம்ருல்லா சலேவின் மெய்க்காப்பாளா்கள் உள்பட 31 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் அவா் லேசான தீக்காயங்களுடன் உயிா் தப்பினாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விற்பனையகத்தக்கு அருகே இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து அந்தப் பகுதியிலிருந்த வாகனங்களும், கடைகளும் எரிந்து நாசமாகின. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் அமைப்பினருக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின்கீழ், அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினா் விலகத் தொடங்கியுள்ளனா். எனினும், அந்த ஒப்பந்த்ததில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.இந்தச் சூழலில், துணை அதிபரைக் குறிவைத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com