உலகளவில் கரோனா பாதிப்பு 2,80,20,881; பலி  9.07 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,07,977ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,80,20,881கோடியை எட்டியுள்ளது. 
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,07,977ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,80,20,881கோடியை எட்டியுள்ளது. 

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,80,20,881 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,07,977ஆக உள்ளது.  கரோனா பாதித்த 2,80,20,881 பேரில் 2,00,98,089 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,49,475 பேரும், இந்தியாவில் 44,62,965 பேரும், பிரேசிலில் 41,99,332 பேரும், ரஷியாவில் 10,41,007 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. 

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,00,98,089 ஆக உள்ளது. தற்போது 70,14,815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,533 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com