பாகிஸ்தானில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்க உள்ளது.
பாகிஸ்தானில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
பாகிஸ்தானில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்க உள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 441 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,99,855-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 1,444 பேர் குணமடைந்ததால், கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,950-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு 5,540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,365-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் அதிக அளவாக சிந்து மாகாணத்தில் 1,31,115 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 97,461 பேரும், கைபர்-பக்துன்க்வா பகுதியில் 36,755 பேரும், இஸ்லாமபாத்தில் 15,804 பேரும், பலூசிஸ்தானில் 13,227 பேரும், 
கில்கிட்-பால்டிஸ்தான் 3,137 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,356 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com