சிங்கப்பூர்: கரோனா பாதிப்பு அதிகரிப்பு

சிங்கப்பூரில், மேலும் 75 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
சிங்கப்பூர்: கரோனா பாதிப்பு அதிகரிப்பு


சிங்கப்பூர்: சிங்கப்பூரில், மேலும் 75 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. எஞ்சியவர்களில் 60 பணியாளர் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 14 பேரும் புதிய கரோனா நோயாளிகளில் அடங்குவர்.
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,166-ஆக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 56,461 பேர் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 48 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மிதமான அறிகுறிகுறிகளைக் கொண்டிருக்கும் 555 பேர் தனிமை முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com