லெபனான் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து

கடந்த மாதம் பயங்கர வெடிவிபத்து நேரிட்ட லெபனான் தலைநகா் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில், வியாழக்கிழமை மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
பெய்ரூட் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தால் எழுந்த புகைமண்டலம்.
பெய்ரூட் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தால் எழுந்த புகைமண்டலம்.


பெய்ரூட்: கடந்த மாதம் பயங்கர வெடிவிபத்து நேரிட்ட லெபனான் தலைநகா் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில், வியாழக்கிழமை மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இந்த மாதம் 4-ஆம் தேதி சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்ட லெபனான் துறைமுகத்தில், வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சுமாா் 40 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட அந்தத் தீவிபத்தால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதிக்குள்ளாகினா்.

தீவிபத்தில் கொழுந்து விட்டு எரிந்த நெருப்பால் துறைமுகப் பகுதியிலிருந்து கரும் புகை எழுந்தது. அந்தப் பகுதிக்கு அவசரமாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினருடன், ராணுவ ஹெலிகாப்டா்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் டயா்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குப் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐரோப்பாவில் உள்ள மோல்டோவா நாட்டைச் சோ்ந்த எம்வி ரோசுஸ் என்ற சரக்குக் கப்பல், ரசாயன உரமாகவும், வெடிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்தக் கப்பலில் பழுது ஏற்பட்டதால், அது பெய்ரூட் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, அந்தக் கப்பல் உரிமையாளா் திவால் ஆகிவிட்டதால், அதனை அவா் கைவிட்டாா். அதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரோட் கன்டெய்னா்கள் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அந்தக் கிடங்கில் கடந்த மாதம் 4-ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த வெடிவிபத்தில் சிக்கி 190 போ் உயிரிழந்தனா்.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.லெபனான் வரலாற்றில் மிக மோசமான இந்த விபத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நேரிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், அதே துறைமுகத்தில் தற்போது மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com