நேபாளம்: அதிகபட்ச தினசரி கரோனா தொற்று

நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக தினசரி கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
நேபாளம்: அதிகபட்ச தினசரி கரோனா தொற்று

நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக தினசரி கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,454 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,919-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இத்துடன், அங்கு அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 322-ஆக உயா்ந்துள்ளது. தற்போது கரோனா உறுதி செய்யப்பட்ட 14,925 போ், அந்த நோய்க்கு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 36,672 போ் வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டுள்ளனா்.கடந்த 24 மணி நேரத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் மட்டும் 696 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com