
பாகிஸ்தானின் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய யுஏஇ
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சம் குடும்பங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
கராச்சியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் டாக்டர் சலீம் அலி அல் தன்ஹானி நேற்று சிந்து மாகாண ஆளுநர் இம்ரான் இஸ்மாயிலுடன் சேர்ந்து மாகாணத்தின் மீர்பூர்காஸ் பகுதியில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இந்த நிவாரணப் பொருள்களை 56 லாரிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சிந்து மாகாண ஆளுநர் இம்ரான் கூறுகையில்,
வெள்ளத்தால் பேரழிவை சந்தித்த மீர்பூர்காஸ், தார் மற்றும் உமர்கோட் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது.
சிந்து மாகாணத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். கடந்த காலங்களில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படும் பகுதிகளில் எல்லாம் அரபு அரசு உதவி செய்து கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானின் நீண்டகால நண்பராக உள்ளது. மேலும் நாட்டில் எந்த ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் மக்களுக்கும் அரசிற்கும் ஆதரவாக இருந்து வருகிறார்கள் என கூறினார்.