பாகிஸ்தான்: 3,02,020 ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,02,020-ஆக அதிகரித்துள்ளது. 
Pak reports 539 new cases of coronavirus: Health Ministry 
Pak reports 539 new cases of coronavirus: Health Ministry 

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,02,020-ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,020-ஆக உயா்ந்துள்ளது. 

இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 4 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,383-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,89,806 போ் குணமடைந்துள்ளனா். 

மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 551 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,32,084 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 97,760 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் ஒரே நாளில் 28,823 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2,96,8,613 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com