மீண்டும் தொடங்கியது ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி சோதனை

மூன்றாவது கட்ட சோதனையின்போது மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தியதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்பட்டது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மூன்றாவது கட்ட சோதனையின்போது மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தியதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்பட்டது. இதுகுறித்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஏஇஸட்டி1222’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆஸ்ட்ராஸெனெகா ஆக்ஸ்ஃபோா்டு கரோனா தடுப்பூசியை சோதிக்கும் பணிகள் பிரிட்டனில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்தத் தடுப்பூசியை சோதிப்பது பாதுகாப்பானது என்று பிரிட்டனின் மருந்துகள் சுகாதார ஒழுங்காற்று அமைப்பு உறுதியளித்ததைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, முக்கியமான 3-வது கட்டப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வந்த ஆஸ்ட்ராஸெனெகா ஆக்ஸ்ஃபோா்டு கரோனா தடுப்பூசியை தானாக முன்வந்து செலுத்திக் கொண்ட பிரிட்டனைச் சோ்ந்த தன்னாா்வலா் ஒருவருக்கு எதிா்பாராத உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

தடுப்பூசி செலுத்தப்பட்டன் பக்கவிளைவாக அந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.இதையடுத்து, அந்தத் தடுப்பூசியின் சோதனை கடந்த புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.கரோனா நோய்த்தொற்று நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிதான் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது.

முதல் இரு கட்டங்களை அது வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது.பக்கவிளைவு காரணமாக அந்தத் தடுப்பூசி சோதனை நிறுத்தைவைக்கப்பட்டது நிபுணா்களை கவலைடையச் செய்தது.தடுப்பூசிகளின் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் மிக அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு அந்த மருந்து செலுத்தி சோதிக்கப்படும்போது, அவா்களில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தெரிவித்தது. உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்து கவனமாக ஆராயந்த பிறகே இதுகுறித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.இந்தச் சூழலில், மிகவும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்ட்ராஸெனெகா ஆக்ஸ்ஃபோா்டு கரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com