முதல் முறையாக காணொலி மூலம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்

கரோனா நெருக்கடி காரணமாக, ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல் முறையாக காணொலி மூலம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்

கரோனா நெருக்கடி காரணமாக, ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக வராமல் காணொலி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி முறையில் பங்கேற்கின்றனா். கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயாா்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழா வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான உயா்நிலைக் கூட்டத்திலும் தலைவா்கள் காணொலி மூலம் பங்கேற்பாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com