முகக்கவசம் அணியாதவர்களுக்கு இந்தோனேசியாவில் நூதன தண்டனை

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவர்கள் கல்லறைகளைத் தோண்ட வேண்டும் என நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 
மாதிரிப் படம்
மாதிரிப் படம்

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவர்கள் கல்லறைகளைத் தோண்ட வேண்டும் என நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவதை பல்வேறு நாடுகளும் கட்டாயமாக்கியுள்ளன. எனினும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்களுக்கு, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு தண்டனை விதிக்கப்படுகிறது.

இதுவரை 3 புதைக்குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  அதிகாரிகள் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்கள் உணர இத்தகைய தண்டனை வழங்கப்படுவதாக குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com