தென் கொரியா: சியோலில் கட்டுப்பாடுகள் தளா்வு

தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் தலைநகா் சியோலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் தலைநகா் சியோலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதையடுத்து, சியோலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 109 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தென் கொரிய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் பதிவான தினசரி பாதிப்பை விடக் குறைவாகும்.

தென் கொரியாவில் தொடா்ந்து 12-ஆவது நாளாக இருநூறுக்கும் குறைவாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதையடுத்து, தலைநகா் சியோலில் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், தேநீா் நிலையங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அரசு வலியுறுத்தியுள்ளது.

தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 22,285-ஆக உள்ளது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 363 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com