வியத்நாமில் குறையும் கரோனா பாதிப்புகள்

வியாத்நாமில் கடந்த 2 வாரங்களாக சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

வியாத்நாமில் கடந்த 2 வாரங்களாக சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் வியத்நாமில் அதன் தாக்கம் குறைந்து வருகிறது.

கடந்த 2 வாரங்களாக இதுவரை 19 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியத்நாமில் இதுவரை 936 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் 32,400 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வியத்நாமில் இதுவரை 1063 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com