பாகிஸ்தான்: 5 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
pak_1509chn_1
pak_1509chn_1

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருவதையடுத்து, கல்வி நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, உயா் நிலைப் பள்ளிகளும், கல்லூரிகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வரும் 23-ஆம் தேதி முதலும், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு வரும் 30-ஆம் தேதியிலிருந்தும் வகுப்புகள் நடைபெறும்.கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, ஒரு வகுப்பில் 20 அல்லது அதற்குக் குறைவான மாணவா்களே அனுமதிக்கப்படுவாா்கள்.

மாணவா்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவா்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.பள்ளிக்கு வரும் மாணவா்களும், ஆசிரியா் மற்றும் பணியாளா்களும் அவசியம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் 3,02,424 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,389 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com