பல்லுயிர் சூழலைக் காக்கத் தவறிய உலக நாடுகள் : ஐ.நா கவலை

பல்லுயிர் சூழலைக் காக்க 2020 ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய உலக நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கவலைத் தெரிவித்துள்ளது.
பல்லுயிர் சூழலைக் காக்கத் தவறிய உலக நாடுகள் : ஐ.நா  கவலை
பல்லுயிர் சூழலைக் காக்கத் தவறிய உலக நாடுகள் : ஐ.நா கவலை

பல்லுயிர் சூழலைக் காக்க 2020 ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய உலக நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கவலைத் தெரிவித்துள்ளது.

புவியில் பல்லுயிர் சூழலைக் காப்பது என்பது இயற்கையை பாதுகாப்பதற்குத் தேவையான முக்கிய நடவடிக்கையாக உள்ளது. உலகில் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வரும் காடுகளின் எண்ணிக்கையும், அதனால் பாதிக்கப்படும் வன உயிரினங்களின் அழிவும் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் உலக நாடுகள் பங்கேற்ற உச்சிமாநாட்டில் 2020ஆம் ஆண்டிற்கான பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. மாசுபாட்டைக் கையாள்வது முதல் பவளப்பாறைகளைப் பாதுகாப்பது வரை, இயற்கை சமூகத்தின் இழப்பைக் குறைக்க இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள பல்லுயிர் உச்சிமாநாட்டுக்கு முன்னதாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஐ.நா அவை, திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைய உலக நாடுகள் தவறி விட்டன என கவலை தெரிவித்துள்ளது.

2010 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட 20 இலக்குகளில் ஆறு இலக்குகள் மட்டுமே இதுவரை ஓரளவு நிறைவடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 ஆயிரம் கோடி டாலர் மானியங்களை உலகநாடுகளின் அரசுகள் நிறுத்த முயற்சிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இயற்கை வாழ்விடங்கள் தொடர்ந்து அழிந்து வருவதாகவும், மனித நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான உயிரினங்களின் வாழ்வு  அச்சுறுத்தலில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐ.நா.வின் பல்லுயிர் தலைவரான எலிசபெத் மருமா மிரேமா, மனித குலத்தின் தற்போதைய நடவடிக்கையே எதிர்கால தலைமுறையினர் இயற்கைவளத்தை அனுபவிப்பதைத் தீர்மானிக்கும்.” என எச்சரித்துள்ளது.

“பூமியின் பல்லுயிர் சூழல் ஒட்டுமொத்தமாக சமரசம் செய்யப்படுகின்றன. மேலும் மனிதகுலம் பல்லுயிர் வளத்தை நீடிக்க முடியாத வழிகளில் சுரண்டுவது, நம்முடைய சொந்த நல்வாழ்வையும், பாதுகாப்பையும், கேள்விக்குள்ளாக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.” என்று எலிசபெத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் சுமார் 260,000 டன் பிளாஸ்டிக் துகள்கள்  கடல்களில் குவிந்துள்ளதாகவும் உலகின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை உலக வன உயிரினங்களின் எண்ணிக்கை 68 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com