ஐ.நா. மகளிர் நிலை ஆணைய தேர்தல்: சீனாவை வீழ்த்திய இந்தியா

பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் உலகளாவிய அமைப்பான ஐ.நா. மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினர்களுக்கான முக்கிய தேர்தலில்,

பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் உலகளாவிய அமைப்பான ஐ.நா. மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினர்களுக்கான முக்கிய தேர்தலில், கடும் போட்டிகளுக்கு இடையே சீனாவை வென்று இந்தியா உறுப்பினராக தேர்வு பெற்றது. 
ஐ.நா. மகளிர் நிலை ஆணையம் (சிஎஸ்டபிள்யூ) ஐ.நா. பொருளாதார - சமூக கவுன்சிலின் கீழ் செயல்படும் அமைப்பாகும். 
54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார - சமூக கவுன்சிலின் 2021-ஆம் ஆண்டு அமர்வுக்கான முதல் வருடாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் பிரிவில் இரு இடங்களுக்கான உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. அதில், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா களமிறங்கின. 
அதில், ஆப்கானிஸ்தான் 39 வாக்குகளையும், இந்தியா 38 வாக்குகளையும் பெற்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாக விளங்கும் சீனா 27 வாக்குகளை மட்டுமே பெற்றது.
இதுகுறித்து, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வெளியிட்ட சுட்டுரை பதிவு:
ஐ.நா. மகளிர் நிலைஆணையத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தியா, ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் பெருமை மிக்க இடத்தை வென்றிருக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பாலின சமத்துவத்தை பேணுவதிலும் இந்தியா மேற்கொண்டு வரும் அனைத்துவித முயற்சிகளையும் இது பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இந்த கெüரவமிக்க அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 
தற்போதைய ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. 2025-ஆம் ஆண்டு வரை ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவி வகிப்பார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com