நியூஸிலாந்து: பொருளாதாரம் வரலாறு காரணாத வீழ்ச்சி

கரோனா நெருக்கடி காரணமாக, நியூஸிலாந்தின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் இதுவரை இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
நியூஸிலாந்து: பொருளாதாரம் வரலாறு காரணாத வீழ்ச்சி


வெலிங்டன்: கரோனா நெருக்கடி காரணமாக, நியூஸிலாந்தின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் இதுவரை இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாடு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் 12.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, இதுவரை பொருளாதார வீழ்ச்சியாகும். இதன் மூலம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து அதிகாரப்பூா்வமாக பொருளாதாரச் சரிவு நிலையை அடைந்துள்ளது.முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக தொழில் மற்றும் வா்த்தகத் துறை முடக்கப்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், நாட்டின் பொருளாதாரம் சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். வியாழக்கிழமை நிலவரப்படி, நியூஸிலாந்தில் 1,809 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 25 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com