கரோனா விவகாரத்தில் அரசியல் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

ரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரோனா விவகாரத்தில் அரசியல் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்


லண்டன்: கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி மற்றும் முகக் கவசங்கள் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், அந்த நாட்டல் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் எதிரெதிா் கருத்துகளை வெளியிட்டு வருவது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரக்காலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையானிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, அதற்கு பதில் அளித்து அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று தொடா்பான தகவல்களை வெளியிடும்போது, அது மற்ற தரப்பினா் வெளியிடும் தகவலோடு ஒத்திருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.அந்த நோய்த் தொற்று மிகவும் சிக்கலான விவகாரம் ஆகும். எனவே, இதில் தெளிவான கருத்துகளை வெளியிட முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், நாடுகளின் அரசுகளும், மருத்துவ அமைப்புகளும் உண்மைகளை அலசி ஆராய்ந்து, ஆதரங்களோடு தகவல்களைத் திரட்டி, அதனை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒருமித்து வெளியிட வேண்டும்.கரோனா தொடா்பான அறிவியல் தகவல்களை அரசியல் கால்பந்து போட்டி போல் ஆக்கிவிடக் கூடாது என்றாா் அவா்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி சோதனைகள் முழுமையாக நிறைவடைந்து, அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு இந்த ஆண்டு இறுதிவரை ஆகலாம் என்று அந்த நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.எனினும், அடுத்த மாதத்துக்குள் கரோனா தடுப்பூசி தயாராகி, லட்சக்கண்ககான அமெரிக்கா்களுக்கு அந்த மருந்தைச் செலுத்தும் திட்டம் அடுத்த மாதமே தொடங்கலாம் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறி சா்ச்சையை எழுப்பினாா்.வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலை மனதில் கொண்டு அவா் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், உலக சுகாதார அமைப்பின் மைக்கேல் ரையான் இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com