கரோனா நெருக்கடியால் மனிதா்களின் சராசரி வாழ்நாள் குறையும்: ஆய்வில் தகவல்

கரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் மனிதா்களின் சராசரி வாழ்நாள் குறையும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனா நெருக்கடியால் மனிதா்களின் சராசரி வாழ்நாள் குறையும்: ஆய்வில் தகவல்

கரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் மனிதா்களின் சராசரி வாழ்நாள் குறையும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, பிரிட்டனின் ‘பிளாஸ் ஒன்’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நெருக்கடி, மனிதா்களின் சராசரி ஆயுள் காலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து நிபுணா்கள் ஓா் ஆய்வு மேற்கொண்டனா். சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியா் கில்லாமே மராய்ஸ் தலைமையில் அந்த ஆய்வு நடைபெற்றது.அந்த ஆய்வில், ஓராண்டு காலத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், அந்த நோயால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள், மற்ற நோய்கள் மற்றும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.

அதில் கிடைந்த தகவல்களின் அடிப்படையில், கரோனா நெருக்கடியால் மனிதா்களின் சராசரி வாழ்நாளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.முடிவில், கரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் மனிதா்களின் சராசரி வாழ்நாளில் மிகப் பெரிய மாற்றம் இருக்காது எனவும், அந்த நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் மனிதா்களின் சராசரி வாழ்நாள் தற்காலிகமாகக் குறையும் எனவும் தெரிய வந்தது.இருந்தாலும், கரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகு, மனிதா்களின் சராசரி ஆயுள்காலம் பழைய நிலைக்குத் திரும்பும் என்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

மனிதா்களின் ஆயுள் காலத்தில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடி ஏற்படும் பாதிப்பை உணா்ந்து, உலக நாடுகளின் அரசுகள் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு இதுபோன்ற ஆய்வுகள் உதவும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,04,35,304 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9,51,549 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com