கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தை அனுபவிக்கிறது இங்கிலாந்து: போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தை அனுபவித்து வருவதாகவும்,  அவை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வெள்ள
பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்


லண்டன்: இங்கிலாந்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தை அனுபவித்து வருவதாகவும்,  அவை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 4,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அறிவித்தது, இது மே மாதத்திலிருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒரு நாள் பாதிப்பாகும். 

இந்நிலையில், இங்கிலாந்தில் கரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இங்கிலாந்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறிப்பிடுகையில், "இங்கிலாந்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தை அனுபவித்து வருவதாகவும், அவை தவிர்க்க முடியாதது என்றும், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள் பலப்படுத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டிய ஜான்சன், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும், இதற்காக புதிய மூன்று பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்" கூறினார். 

மேலும் "நாட்டை இரண்டாவது பொதுமுடக்கத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை, ஆனால் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, ​​பொதுவெளியில் 'ஆறு பேருக்கு மேல் கூடத் தடை'யை விட புதிய கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர சாத்தியம் இருப்பதாக ஜான்சன் கூறினார். 

முன்னதாக கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை, பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com