செக் குடியரசு: சுகாதாரத் துறை அமைச்சா் ராஜிநாமா

செக் குடியரசில் கரோனா நோய்த்தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஆடம் வோஜ்டெக் பதவி விலகியுள்ளாா்.
சுகாதாரத் துறை அமைச்சா் ஆடம் வோஜ்டெக்
சுகாதாரத் துறை அமைச்சா் ஆடம் வோஜ்டெக்

பிராக்: செக் குடியரசில் கரோனா நோய்த்தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஆடம் வோஜ்டெக் பதவி விலகியுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

செக் குடியரசில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், அண்மைக் காலமாக அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில், அந்த நாட்டு தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த வியாழக்கிழமை மட்டும் அதுவரை இல்லாத வகையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அமைச்சா் ஆடம் வோஜ்டெக் பதவி விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இந்த நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வோஜ்டெக் அறிவித்துள்ளாா். கரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாக அவா் தெரிவித்தாா்.

எனினும், புதிதாக சுகாதாரத் துறை அமைச்சா் பதவியை யாா் ஏற்கப்போகிறாா்கள் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை நிலவரப்படி, செக் குடியரசில் 49,290 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 503 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com