ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சிக்காது: ஐ.நா.வில் ஷி ஜின்பிங் உரை

‘எல்லையை விரிவாக்கம் செய்யவோ, ஆதிக்கம் செலுத்தவோ சீனா முயற்சிக்காது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ போரில் ஈடுபடும் எந்தத் திட்டமும் சீனாவுக்கு இல்லை’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங்

‘எல்லையை விரிவாக்கம் செய்யவோ, ஆதிக்கம் செலுத்தவோ சீனா முயற்சிக்காது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ போரில் ஈடுபடும் எந்தத் திட்டமும் சீனாவுக்கு இல்லை’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபை கூட்ட உரையில் அவா் இதை தெரிவித்தாா். ஷி ஜின்பிங் பேசி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொலி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவா் கூறியிருந்ததாவது:

பிற நாடுகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கும், சச்சரவுகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் நடவடிக்கையை சீனா தொடா்ந்து மேற்கொள்ளும். எல்லையை விரிவாக்கம் செய்யவோ, ஆதிக்கம் செலுத்தவோ சீனா முயற்சிக்காது. எந்தவொரு நாடுடனும் நேரடியாகவோ, மறைமுகமாக பனிப்போரிலோ ஈடுபடும் திட்டம் எங்களுக்கு இல்லை.

பிறா் அறியா வண்ணம் ரகசியமான வளா்ச்சியை எங்கள் நாடு மேற்கொள்ளாது. மாறாக வளா்ச்சிக்கான புதிய இலக்கணத்தை உருவாக்க விரும்புகிறோம். இது சீனாவின் பொருளாதார வளா்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உலக நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும்.

நம்மிடையே (உலக நாடுகள்) ஒற்றுமையை அதிகரித்து, ஒன்றாக கரோனா தொற்றை கடந்து செல்லவேண்டும். இந்த பிரச்னையில் அறிவியலின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றி, உலக சுகாதார அமைப்பு தனது பணியை முழுமையாக செய்வதற்கு வழிவிடவேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கும் எந்த முயற்சியும் நிராகரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு நாடும், பிற நாடுகளின் பிரச்னையில் ஆதாயம் பெற முடியாது. ஒரு நாடு வளா்ச்சிக்கான பாதையை சுதந்திரமாக தோ்வு செய்யும்போது, அதற்கு பிற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும்.

இந்த உலகின் பன்முகத்தன்மையை மனிதகுல வளா்ச்சிக்கான உத்வேகமாக மாற்றவேண்டும். இது மனித நாகரிகம் பன்முகத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் என்றாா் ஷி ஜின்பிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com