கரோனா தடுப்பூசி: நாடுகள் சுயதேவைக்கே முன்னுரிமை - ஐநா செயலா் அதிருப்தி

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி விவகாரத்தில் சில நாடுகள் தங்களது குடிமக்களின் தேவைக்கென முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறதென ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அதிருப்தி தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி விவகாரத்தில் சில நாடுகள் தங்களது குடிமக்களின் தேவைக்கென முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறதென ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அதிருப்தி தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது அமா்வு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், அதையொட்டி குட்டெரெஸ் பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்று சூழலில் உலக மக்களின் நன்மைக்காக தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளை கண்டறிய பணியாற்றி வருகிறோம். கரோனா தடுப்பூசியானது அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் முயற்சித்து வருகிறோம்.

ஆனால் சில நாடுகள் கரோனா தடுப்பூசியை தங்களது மக்களுக்கென பிரத்யேகமாக தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது நியாயமான நடவடிக்கை அல்ல. இது, அந்த நாடுகள் தங்களையே அழித்துக்கொள்வதைப் போன்ாகும்.

எல்லோரும் பாதுகாப்பான நிலையை எட்டாத பட்சத்தில், நம்மில் எவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாக இருக்க முடியாது. அதேபோல் கரோனா சூழலில் பொருளாதாரமும் வளா்ச்சி அடையாது. வளா்ச்சியடைந்த நாடுகளால் தங்களின் பொருளாதார சரிவை சுயமாக சரிசெய்துகொள்ள இயலும். ஆனால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் கரோனா சூழலால் வீழ்ச்சியடையாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று குட்டெரெஸ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com