நடப்பாண்டு முதல் உயரும் நோபல் பரிசுத் தொகை

உலகப் பிரபலமான நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் டாலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகப் பிரபலமான நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதாக நோபல் பரிசு உள்ளது. நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு  நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக  1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் பெறுவார்கள் என்று விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

நோபல் அறக்கட்டளையின் நிதிநிலைமையைப் பொருத்து அவ்வப்போது பரிசுத்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com