உலகளவில் கரோனா பாதிப்பு 3.24 கோடியைத் தாண்டியது!

உலகளவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.24 கோடியை எட்டியுள்ளது. 
உலகளவில் கரோனா பாதிப்பு 3.24 கோடியைத் தாண்டியது!

உலகளவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.24 கோடியை எட்டியுள்ளது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,24,16,537 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,87,743 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்த 3,24,16,537 கோடி பேரில் 2,39,32,423 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 74,96,371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 63,322 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 71,85,471 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,07,538 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து தொற்று பாதிப்பில் 58 லட்சத்து 58 ஆயிரத்து 570 பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசில் (4,657,702), ரஷ்யா (1,123,976), கொலம்பியா (790,823), பெரு (782,695), மெக்ஸிகோ (715,457), ஸ்பெயின் (704,209), அர்ஜென்டினா (678,266), தென்னாப்பிரிக்கா ( 667,049), பிரான்ஸ் (536,289), சிலி (451,634), ஈரான் (436,319), இங்கிலாந்து (418,889), பங்களாதேஷ் (355,384), ஈராக் (337,106) மற்றும் சவுதி அரேபியா 3,31,8575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பிரேசிலில் தற்போது வரை 1,39,808 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்ஸிகோ (75,439), இங்கிலாந்து (41,991), இத்தாலி (35,781), பெரு (31,870), பிரான்ஸ் (31,524), ஸ்பெயின் (31,118), ஈரான் (25,015), கொலம்பியா (24,746), ரஷ்யா (19,876), தென்னாப்பிரிக்கா (16,283), அர்ஜென்டினா (14,766), சிலி (12,469), ஈக்வடார் (11,213) மற்றும் இந்தோனேசியாவில் 10,105 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com