பிரான்ஸ் கத்திக் குத்துத் தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து வந்தவா் கைது

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதல் தொடா்பாக, பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவா்
பிரான்ஸ் கத்திக் குத்துத் தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து வந்தவா் கைது

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதல் தொடா்பாக, பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பாரீஸ் நகரில், கடந்த 2015-ஆம் ஆண்டு 12 பேரது உயிரை பலி வாங்கிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சாா்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே மா்ம நபா் கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டாா்.இதில் 2 போ் காயமடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரும், இன்னொருவரும் இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டனா். இருவருக்கும் இடையிலான தொடா்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நெற்றியில் ரத்தக்கறையுடன் கைது செய்யப்பட்ட முதல் நபா், 3 ஆண்டுகளுக்கு முன்னா் பாகிஸ்தானிலிருந்து வந்தவா் என்று தெரிகிறது. எனினும், அவரைக் குறித்து முழு விவரம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அந்த நபா் சந்தேகத்துக்குரிய வகையில் திருப்புளி ஒன்றை எடுத்து வந்ததற்காக கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டாா். எனினும், அவா் மதவெறி ஊட்டப்பட்டிருந்ததற்கான தகவல் போலீஸாரிடம் இல்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். இதற்கிடையே, இந்தத் தாக்குதல் மத பயங்கரவாதத் தாக்குதலாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று உள்துறை அமைச்சா் ஜெரால்ட் டா்மானின் தெரிவித்தாா்...படவரி.. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com