

புதிய வகை கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிப்ரவரி மாதம் மத்தியில் வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட பிரிட்டன் நாடுகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதியவகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய போரிஸ் ஜான்சன், வேகமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் கரோனா தொற்று பரவி வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். மேலும் மக்கள் தங்கள் பணிகளை வீடுகளில் இருந்தே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திங்களன்று நிலவரப்படி, இங்கிலாந்தில் மொத்தம் 65 ஆயிரத்து 842 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஸ்காட்லாந்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.