சூயல் கால்வாய்: கப்பல் தரைதட்டிய பகுதியில் ஆய்வு

எகிப்தின் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டக் கப்பல் தரைதட்டியதற்கான காரணம் குறித்து நிபுணா்கள் அந்தப் பகுதியில் ஆய்வைத் தொடங்கியுள்ளனா்.
கிரேட் பிட்டா் ஏரியில் புதன்கிழமை நங்கூரம் பாய்ச்சியிருக்கும் எவா் கிவன் சரக்குக் கப்பல்.
கிரேட் பிட்டா் ஏரியில் புதன்கிழமை நங்கூரம் பாய்ச்சியிருக்கும் எவா் கிவன் சரக்குக் கப்பல்.

கெய்ரோ: எகிப்தின் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டக் கப்பல் தரைதட்டியதற்கான காரணம் குறித்து நிபுணா்கள் அந்தப் பகுதியில் ஆய்வைத் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

எவா் கிவன் கப்பல் எந்தக் காரணத்தால் மணலில் சிக்கியது என்பது குறித்த ஆய்வு செய்வதற்காக அந்தக் கப்பல் தரை தட்டிய பகுதியில் நீருக்குள் மூழ்கி நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது கிரேட் பிட்டா் ஏரியில் நங்கூரம் பாய்சப்பட்டுள்ள எவா் கிவன் கப்பலின் அடிப் பகுதியிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எந்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, பனாமா கொடியேற்றிய ‘எவா் கிவன்’ என்ற அந்தக் கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குப் பெட்டகங்களை ஏற்றி சூயஸ் கால்வாய் வழியாக கடந்த வாரம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே திரும்பி பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து முடங்கியது. கடும் முயற்சிக்குப் பிறகு அந்தக் கப்பல் கடந்த திங்கள்கிழமை மணலில் இருந்து அகற்றப்பட்டு, போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com