அதிகரிக்கும் கரோனா: பிரேசிலுடனான எல்லையை மூடுகிறது பொலிவியா

பிரேசிலில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேசிலுடனான எல்லையை வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிவியா அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தெரிவித்தார். 
பிரேசிலுடனான எல்லையை மூடுகிறது பொலிவியா
பிரேசிலுடனான எல்லையை மூடுகிறது பொலிவியா

பிரேசிலில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேசிலுடனான எல்லையை வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிவியா அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தெரிவித்தார். 

பொலிவியாவில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அண்டை நாடான பிரேசில் உடனான எல்லை தற்காலிகமாக மூடப்படுகிறது. 

இந்நிலையில், "உயிர் பாதுகாப்பு, மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் விதமாகவும், தொற்றுநோயின் கண்காணிப்பு நடவடிக்கைள், தொற்று பரவலைக் குறைக்கும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாக பிரேசிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு அதிபர் லூயிஸ் ஆர்ஸ் அறிவித்துள்ளார். 

"பொருளாதாரத்தை மூச்சுத் திணறச் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பதால் எல்லை மூடல் நீட்டிக்கப்படும் வேளையில், வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தினசரி மூன்று மணி நேரத்திற்கு எல்லை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.  

பொலிவியாவில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,227 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com