
கனடாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை லட்சத்தைக் கடந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 11,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 10,01,645 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 42 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி 23,050-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 9,21,459 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 57,136 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 704 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.