13.13 கோடியைக் கடந்தது கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13.13 கோடியைத் தாண்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13.13 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 13.13 கோடியைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, உலகின் 221 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,13,47,619 ஆக உள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 28,58,867 போ் பலியாகியுள்ளனா். மேலும், 10,57,26,126 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,27,62,626 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 97,385 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 3,13,83,126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 5,68,513 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, கரோனாவால் பிரேஸில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 1,29,53,597 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 3,30,297 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

அந்த இரு நாடுகளுக்கும் அடுத்தபடியாக தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,24,84,127 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,64,655 பேர் உயிரிழந்துள்ளனர். 

அடுத்தபடியாக பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 45 லட்சத்துக்கும் மேலானவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com