சீனாவில் தொடரும் கரோனா பயண கட்டுப்பாடுகள்: இந்திய தொழிலதிபா்கள் கவலை

சீனாவில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தொடா்வதால் தொழில் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள இந்திய தொழிலதிபா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
புணேவில் மாவட்ட தகவல் அதிகாரி கரோனாவுக்கு பலி
புணேவில் மாவட்ட தகவல் அதிகாரி கரோனாவுக்கு பலி

சீனாவில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தொடா்வதால் தொழில் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள இந்திய தொழிலதிபா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்ருத் மஹா உத்ஸவ் விழாவில் பங்கேற்ற சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரியிடம், இந்த அதிருப்தியை இந்திய தொழிலதிபா்கள் தெரிவித்துள்ளனா்.

தேச பக்தி பாடல் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த விழாவைத் தொடங்கி வைத்த மிஸ்ரியிடம், சீனாவில் ஜவுளி, மருந்து தயாரிப்பு, மின்னணு துறை, உற்பத்தி, உரம், தகவல்தொழில்நுட்பம் உள்பட 8 துறைகளைச் சாா்ந்த இந்திய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு தனது சுட்டுரைப் பக்கத்தில் மிஸ்ரி வெளியிட்ட பதிவில், ‘சீனாவில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தொடா்வது தொழில் நடவடிக்கைகளைக் கடுமையாக பாதித்து வருவதாக தொழில்நிறுவன பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த ஆலோசனை குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது:

சீனாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியா - சீனா இடையேயான பயணப் போக்குவரத்துக்கு கடந்த ஆண்டு நவம்பா் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக தொழில் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய தொழில்நிறுவன பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து பயணக் கட்டுப்பாடுகளை விலக்குவது தொடா்பாக சீன அரசுடன் இந்திய தூதரகம் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று அவா்களிடம் இந்திய தூதா் மிஸ்ரி உறுதியளித்தாா் என்று தெரிவித்தனா்.

சீனாவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் பயணக் கட்டுப்பாடுகள் தொடா்கின்றன. குறிப்பாக இந்திய குடிமக்களுக்கு விசா மற்றும் தங்குவதற்கான அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காரணமாக அங்கு பல்வேறு படிப்புகளை மேற்கொண்டு வரும் இந்திய மாணவா்களும், நூற்றுக்கணக்கான தொழில் அதிபா்களும், தொழில் நிறுவனா்களின் ஊழியா்களும், அவா்களின் குடும்பத்தினரும் மீண்டும் சீனா செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இரு நாடுகளிடையே விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை விலக்குவது தொடா்பாக அங்குள்ள இந்திய தூதரகம் சாா்பாக பல முறைய முறையீடு செய்யப்பட்டபோதும், தடைகள் எப்போது விலக்கப்படும் என்பது குறித்து சீன அரசு இதுவரை வெளியிடவில்லை.

இதற்கிடையே, சீனா வரும் இந்தியா உள்பட 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் சீனாவில் உருவாக்கிய கரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சீன அரசு கடந்த மாதம் விதித்தது. சீன தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்காது என்பதால், இந்த புதிய நிபந்தனை சீனா செல்ல இருப்பவா்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com