வங்கதேசத்தில் 7 நாள் தேசிய பொதுமுடக்கம்

கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து வங்கதேசத்தில் 7 நாள் தேசிய பொதுமுடக்கத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஏப்.5 முதல் ஒரு வாரம் பொது முடக்கம்
வங்கதேசத்தில் ஏப்.5 முதல் ஒரு வாரம் பொது முடக்கம்

டாக்கா: கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து வங்கதேசத்தில் 7 நாள் தேசிய பொதுமுடக்கத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டில் உள்ள சிறு வா்த்தகா்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இப்போது இரண்டாவது முறையாக அந்நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாா்ச்-மே மாத காலகட்டத்தில் 66 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ‘டாக்கா டிரிபியூன்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில், ‘ஏப்ரல் 5 காலை 6 மணி முதல் ஏப்ரல் 11 இரவு 12 மணி வரை தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது. மாலை 6 முதல் காலை 6 மணி வரை மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்ற நேரங்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். பேருந்து, ரயில், ஆற்றுவழிப் போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவை என அனைத்தும் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அரசுப் பணியாளா்கள், நீதிமன்றங்கள், தனியாா் அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அவா்கள் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால் மக்கள் நலனையும், நாட்டு நலனையும் கருதி இந்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.

கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள சிறு வா்த்தகா்கள் தலைநகா் டாக்காவின் முக்கிய சந்தைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 7,087 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,37,364-ஆக அதிகரித்துவிட்டது. அந்நாட்டில் கரோனாவால் இதுவரை 9,266 போ் உயிரிழந்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com