காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ள மறுக்கும் கிரேட்டா துன்பெர்க்: காரணம் என்ன?

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கிளாஸ்கோ காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கிரேட்டா துன்பெர்க்
கிரேட்டா துன்பெர்க்

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கிளாஸ்கோ காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் பிரிட்டனின் கிளாஸ்கோவில் “கோப்26 காலநிலை உச்சி மாநாடு” நடைபெற உள்ளது. உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் கலந்து கொள்ள உள்ள இந்த உச்சி மாநாட்டில் புவி வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

மாறி வரும் காலநிலையால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவை எட்டுவதில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று பேரிடர் சூழலில் வளர்ந்த நாடுகள் பலவும் தடுப்பூசி விநியோகத்தில் சமத்துவமற்ற தன்மையை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ள துன்பெர்க் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்றத்தாழ்வான நிலையையே வளர்ந்த நாடுகள் தொடர்ந்தால் தான் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என கிரேட்டா துன்பெர்க் அறிவித்துள்ளார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனம் வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருவதாக கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com