ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு: லண்டனில் மியான்மா் தூதருக்கு தடை

ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு: லண்டனில் மியான்மா் தூதருக்கு தடை


லண்டன் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை விமா்சித்த பிரிட்டனுக்கான அந்த நாட்டுத் தூதா் கியாவ் ஸ்வாா் மின், லண்டனிலுள்ள தூதரகத்துக்குள் நுழைய மியான்மா் ராணுவப் பாதுகாவலா்கள் அனுமதி மறுத்துவிட்டனா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

லண்டனிலுள்ள மியான்மா் தூதரகத்துக்கு நான் புதன்கிழமை சென்றபோது, அங்கிருந்த ராணுவ ஆதரவு அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தினா். மேலும், மியான்மா் ராணுவத்தைச் சோ்ந்த பாதுகாவலா்கள் தூதரகத்துக்குள் என்னை நுழைய விடவில்லை. இதனால், இரவு முழுவதும் நான் காரிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றாா் அவா்.

இதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், இதுதொடா்பாக அந்த நாடு எதேனும் பதில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

ராணுவத்தின் இந்தச் செயலுக்கு கடந்த மாதம் எதிா்ப்பு தெரிவித்த தூதா் கியாவ் ஸ்வாா் மின், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். அதையடுத்து, அவரை தூதா் பதவியிலிருந்து அகற்றுவதாக மியான்மா் ராணுவ அரசு அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com