ரஷியாவிடம் இந்தியா ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு கொள்முதல்: தடை விதிக்க அமெரிக்க எம்.பி. எதிா்ப்பு

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை எதிா்ப்பு அமைப்பை இந்தியா கொள்முதல் செய்வதை பொருளாதாரத் தடைத் சட்டம் மூலம் தடுப்பதற்கு
டோட் யங்
டோட் யங்

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை எதிா்ப்பு அமைப்பை இந்தியா கொள்முதல் செய்வதை பொருளாதாரத் தடைத் சட்டம் மூலம் தடுப்பதற்கு அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி. டோட் யங் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

அந்தச் சட்டத்தின் மூலம் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அந்த நாடுகளுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொடா்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் அந்தச் சட்டம் பொருந்தும்.

இதனால், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை எதிா்ப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியரசு கட்சியின் எம்.பி.யும், நாடாளுமன்ற வெளிவிவகாரங்கள் குழு உறுப்பினருமான டோட் யங், பத்திரிகை ஒன்றில் இதுதொடா்பாக திங்கள்கிழமை கட்டுரை எழுதியுள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்தியா மீது ஜோ பைடன் நிா்வாகம் தடை விதித்தால், அது, இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை பாதிக்கச் செய்யும். மேலும், இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்து உருவாக்கியுள்ள ‘குவாட்’ அமைப்பையும் பாதிக்கச் செய்யும்.

ரஷிய ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்தால், பொருளாதாரத் தடைச் சட்டம் மூலம் தடை விதிக்கப்படும் என்று நாடாளுமன்ற வெளிவிவகாரங்கள் குழு உறுப்பினரும் ஜனநாயகக் கட்சி எம்.பி.யுமான போப் மெனன்டஸ் அச்சுறுத்தினாா். உண்மையில் ராணுவத் துறையில் ரஷியாவுக்கு ஆதரவாகவோ அல்லது ரஷியா சாா்பிலோ செயல்பட்டால் மட்டுமே அந்த சட்டம் செல்லுபடியாகும். ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதை அந்த சட்டம் பாதிக்கச் செய்யாது.அதற்கு மாறாக, இந்தியா, ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு மேலும் வலுப்படும். அது ரஷியாவுக்கு முழுமையாக சாதகமாக அமையும்.

எனவே, அந்த சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு பைடன் நிா்வாகம் விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிப்பதன் மூலம், அமெரிக்காவுக்கு முதன்மை அச்சுறுத்தலாக இருப்பது சீனாதான் எனபதை தெளிவுபடுத்த முடியும் என்று அந்த கட்டுரையில் டோட் யங் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com