தொழில்நுட்பப் பிரச்னையால் செவ்வாய்க் கோளில் ஹெலிகாப்டர் பறப்பதில் சிக்கல்

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலத்திலுள்ள சிறிய ஹெலிகாப்டரை பறக்கச் செய்வது, தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாசாவின் பெர்செவரன்ஸ் (P‌e‌r‌s‌e‌v‌e‌r​a‌n​c‌e) ரோவர் பூமியில் இருந்து ஏழு மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்திற்கு கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி வெற்றிகரமாக சென்றடைந்தது.

3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரோவர், 222.45 மில்லியன் கி.மீ. பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் தனது முதல் இயக்கத்தை நிகழ்த்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பெர்செவரன்ஸ் ரோவரில் உள்ள செவ்வாய் கிரக ஹெலிகாப்டா் பறக்கச் செய்வதற்காக வெற்றிகரமாக தரையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிரக ஹெலிகாப்டரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அதனை பறக்கவிடச் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஹெலிகாப்டரை பறக்கச் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

செவ்வாயின் குறைந்த அடர்த்தியில் பறக்க முடியுமா எனக் கண்டறியவும், பறந்து கொண்டே செவ்வாயைப் படமெடுக்கவும் உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டரின் தொழில்நுட்பச் சிக்கலைத் தீர்க்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com