அமெரிக்காவைத் தொடர்ந்து ஆப்கனிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் ஆஸ்திரேலியா

அமெரிக்காவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் அமெரிக்காவின் உலக வர்த்தகக் கட்டிடத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அமெரிக்கா தனது படைகளை நிறுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய நாடும் தனது படைவீரர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலிய படைவீரர்கள் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் திரும்பப் பெறப்படுவர் எனத் தெரிவித்துள்ள அவர் இனி ஆப்கனின் ஸ்திரதன்மை இருதரப்பு இடையேயான கூட்டாண்மை மூலமாக செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் தலிபான்களும் தங்களுக்கிடையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com