பாகிஸ்தான் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
பாகிஸ்தான் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழில் மதக் கடவுளை கேலி செய்யும் வகையிலான சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தைக் கண்டித்து உலகின் இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் பிரான்ஸ் தூதரை வெளியேற்ற வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படும் சூழலைத் தடுக்கும் விதமாக இஸ்லாமாபாத் உள்பட நாடு முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானில் முகநூல், சுட்டுரை (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com