உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் 30 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.05 கோடியைத் தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 30.14 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் 30 லட்சத்தைத் தாண்டியது
உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் 30 லட்சத்தைத் தாண்டியது

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.05 கோடியைத் தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 30.14 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பேரிடர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 30 லட்சத்தைத் தாண்டிவிட்டது. 

கரோனா பாதிப்பு குறித்து உலகளவில் புள்ளி விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலகளவில் இதுவரை கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை, உக்ரைன், வெனிசுலா, போர்ச்சுக்கல் போன்றவற்றின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு நிகராகும்.

அதுமட்டுமல்ல, இது சிகாகோ நகரில் வாழும் மக்கள் தொகையை விட அதிகம் என்றும், பிடடெல்பியா மற்றும் டல்ஸ் மக்கள் தொகைக்கு ஒப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில அரசுகள் பலி எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தது போன்றவையும் இதற்குக் காரணம்.

ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,06,02,145 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 30,14,283 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,94,36,122 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,81,51,740 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,718 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த மாதத்தில் இதுவரை புதிதாக 20 லட்சம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com