இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.1.83 லட்சம் கோடியாக வளா்ச்சி

இந்தி மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 2,444 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.83 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இந்தி மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 2,444 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.83 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (பாா்மெக்ஸில்) சனிக்கிழமை கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2021 மாா்ச்சில்தான் மிக அதிகபட்ச மதிப்பில் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. அந்த மாதத்தில் மட்டும் 230 கோடி டாலா் மதிப்புக்கு மருந்துப் பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2020 மாா்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 154 கோடி டாலருடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மாா்ச்சில் ஏற்றுமதி வளா்ச்சி விகிதம் 48.5 சதவீதத்தை தொட்டுள்ளது.

பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டதையடுத்து விநியோக சங்கிலித் தொடரில் இடையூறு ஏற்பட்டதன் காரணமாக கடந்தாண்டு மாா்ச்சில் மருந்துகள் ஏற்றுமதி மிகவும் குறைந்து போனது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது ஏற்றுமதி வளா்ச்சி விகிதம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த 2020-இல் சா்வதேச மருந்துப் பொருள்கள் சந்தை 1-2 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியை சந்தித்த நிலையிலும் இந்தியாவின் ஜெனரிக் மருந்துகளுக்கான தேவை மிக கணிசமான அளவில் அதிகரித்தது. இதற்கு, இந்திய மருந்துகள் குறைந்த விலையில் நிறைந்த தரம் கொண்டவையாக இருந்ததே முக்கிய காரணம்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்திய மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்து 2,444 கோடி டாலரை எட்டியுள்ளது. கடந்த 2019-20-இல் இவற்றின் ஏற்றுமதி 2,058 கோடி டாலராக காணப்பட்டது.

உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய அறிவித்துள்ளதையடுத்து இனி வரும் ஆண்டுளில் இந்திய தடுப்பூசிகளின் ஏற்றுமதி மிகப் பெரிய அளவிலான வளா்ச்சியை எட்டிப்பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைப்பதுடன் உள்நாட்டு மருந்து நிறுவனங்களின் வளா்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இந்திய மருந்துப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக வட அமெரிக்கா உள்ளது. ஒட்டுமொத்த இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்த நாட்டின் பங்களிப்பு மட்டும் 34 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

தென்ஆப்பிரிக்கா 28 சதவீத பங்களிப்புடன் இந்தியாவுக்கு இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக உள்ளது.

இதைத் தொடா்ந்து, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கான மருந்துகள் ஏற்றுமதி வளா்ச்சி முறையே 12.6 சதவீதம், 30 சதவீதம் மற்றும் 21.4 சதவீதமாக இருந்ததாக பாா்மெக்ஸில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com