குற்ற வழக்கு: விசாரணைக்கான புதிய வரைவு விதிகளைப் பின்பற்றவும் உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்கு விசாரணைக்கான புதிய வரைவு விதிகளைப் பின்பற்றுமாறு அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
குற்ற வழக்கு: விசாரணைக்கான புதிய வரைவு விதிகளைப் பின்பற்றவும் உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: குற்ற வழக்கு விசாரணைக்கான புதிய வரைவு விதிகளைப் பின்பற்றுமாறு அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குற்ற வழக்கு விசாரணையில் உள்ள குறைபாடுகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த 2017-இல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வழக்கில், அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமா்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

குற்ற வழக்கு விசாரணைக்கான வரைவு விதிகளை(2021) அனைத்து உயா்நீதிமன்றங்களும் 6 மாதங்களுக்குள் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை அமல்படுத்த மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து 6 மாதங்களுக்குள் ஒப்புதலைப் பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் தங்கள் காவல் துறை விதிமுறைகளில் 6 மாதங்களில் புதிய திருத்தங்களைச் சோ்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

புதிய விதிகளின்படி, அனைத்துக் குற்ற வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அழைப்பாணை அனுப்புவது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது ஆகியவை இருந்தாலும், விசாரணையின் தொடக்கத்திலேயே வழக்கை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து முழுமையாக திட்டமிட வேண்டும். சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகள், தடயங்களாகக் கிடைக்கும் ஆதாரங்கள், ஆவணங்களாகக் கிடைக்கும் ஆதாரங்கள் என வகைப்படுத்த வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கைகள் அச்சிடப்பட்டவையாக இருக்க வேண்டும். சாட்சிகள் அளிக்கும் வாக்குமூலங்களும் கணினி மூலம் அச்சிடப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com