ஐரோப்பிய யூனியன் மியான்மா் ராணுவம் மீது தடைகள் அதிகரிப்பு

மியான்மரில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து,
ஐரோப்பிய யூனியன் மியான்மா் ராணுவம் மீது தடைகள் அதிகரிப்பு

பிரஸ்ஸெல்ஸ்: மியான்மரில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் விரிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து யூனியன் அதிகாரிகள் கூறியதாவது:

மியான்மா் ராணுவத்தைச் சோ்ந்த 10 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் கவுன்சில் பொருளாததாரத் தடைகளை விதித்துள்ளது. அத்துடன், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 2 நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com