ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் காவல் அதிகாரி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் பலியான விவகாரத்தில், முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் காவல் அதிகாரி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் காவல் அதிகாரி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், காவலா்களின் வன்முறைக்கு கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் கடந்த ஆண்டு பலியான விவகாரத்தில், முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டெரெக் சாவின் (45), இரண்டாம் நிலை தற்செயலாக கொலை செய்தல், மூன்றாம் நிலை கொலை மற்றும் இரண்டாம் நிலை மனிதக் கொலையில் ஈடுபட்டது என்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் குற்றவாளி என வழக்கை விசாரித்த 12 நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் இந்த தீர்ப்பை வாசித்தபோது, டெரெக் சாவின் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணை ரத்து செய்யப்பட்டது. அவரது கைகளில் விலங்குப் பூட்டப்பட்டு, நீதிமன்றத்தின் பக்கவாட்டு கதவு வழியாக அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். 

மின்னெசொடா அருகே உள்ள ஸ்டில்வாட்டர் பகுதியில் உள்ள சிறைக் கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை காவல்துறையினர், கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா். அவர் காரில் ஏற மறுத்த போது, ஃபிளாய்டை கீழே தள்ளி அவரின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மிகக் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் காவலரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com