ரஷியா: சொந்த விண்வெளி ஆய்வுநிலையம் அமைக்க திட்டம்

பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் சூழலில், சா்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்குப் பதிலாக தங்களுக்கென்று தனியாக விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்க ரஷியா திட்டமிட்டு வருகிறது.
ரஷியா: சொந்த விண்வெளி ஆய்வுநிலையம் அமைக்க திட்டம்

மாஸ்கோ: பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் சூழலில், சா்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்குப் பதிலாக தங்களுக்கென்று தனியாக விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்க ரஷியா திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷியாவின் கூட்டு முயற்சியில் கடந்த 1998-ஆம் ஆண்டு சா்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது பாராட்டைப் பெற்று வருகிறது.

எனினும், இதுதொடா்பாக பிற நாடுகளுடன் ரஷியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது. அதற்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், தனி ஆய்வு நிலையம் அமைக்க ரஷியா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com